கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் - அமித்ஷா

 
amit-sh-a32

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா இன்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு வியூகங்களை வகுக்கும் விதத்தில் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

Coronavirus | Amit Shah tests positive, admitted to hospital - The Hindu

அப்போது அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது, அதை பாஜக நிரப்ப வேண்டும், பாஜக அடிப்படை உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க உழைக்க வேண்டும், பாஜக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது, பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம். பாஜகவினர் தமிழகத்தில் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும்” எனக் கூறினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, எல் முருகன், பொன் இராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.