அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு

 
u

அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது .   தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதயநிதிக்காக அவரது சிறப்பு திட்டம் செயலாக்க துறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.  

 சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 14ஆம் தேதி அன்று அமைச்சராக பதவி ஏற்றார்.   அமைச்சர் மெய்ய நாதன் வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,   முதல்வர் ஸ்டாலின் வசம் இருந்த சிறப்பு திட்ட செயலாக்கத்துறை,  அமைச்சர் பெரிய கருப்பன் வசம் இருந்த வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை ஆகியவை உதயநிதி ஸ்டாலினுக்காக ஒதுக்கப்பட்டன.

uu

 தற்போது புதிதாக தொழிலாளர் நலத்துறை கீழ் செயல்பட்டு வந்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அமைச்சர் உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது .

 புதிய தலைமுறை இளைஞர்கள் இடம் உதயநிதியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கின்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.   இதற்கான அரசாணையை மனித வள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டு இருக்கிறார்.