அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- 26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு

 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 

அனல் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு... 26 காளைகளை அடக்கிய அபி  சித்தருக்கு கார் பரிசு | Alanganallur jallikattu Ends: Abhi Siddar tamed 26  bulls and got car as first prize

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க மொத்தம் 522 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். மாடுபிடி வீரர்களுக்கு அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வளர்மதி தலைமையில் 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 823 காளைகள் கறமிறங்கின. மொத்தம் 10 சுற்றுகளில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் 26 காளைகளை அடக்கிய அபி சித்தர் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அவிழ்த்துவிடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.