12 காளைகளை பிடித்து அபி சித்தர் முதலிடம்

 
tn

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை 220 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக போட்டியில்  பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர்.  மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் வாடிவாசல் அருகே உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பச்சை கொடி அசைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் மூன்றுb கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன.
jallikattu

இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை 220 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 12 காளைகளை அடக்கி சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்துள்ளார்.  ஒன்பது காளைகளைப் பிடித்து அஜய் இரண்டாவது இடத்திலும், சித்தாலங்குடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்  மற்றும் ரஞ்சித் ஆகியோர் தலா  ஏழு காளைகளைப் பிடித்து மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.  இந்த சூழலில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் எட்டு பேர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் -8,  மாட்டு உரிமையாளர் -6, பார்வையாளர் ஒருவர் என மொத்தம் 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

jallikattu

அவிழ்த்து விடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து வழங்கியு வருகிறார்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடிய தஞ்சாவூர் காளையின்  உரிமையாளருக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.  இந்த தங்க மோதிரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அமைச்சர் உதயநிதி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.