மூன்று மாதம் குடித்தனம் நடத்திவிட்டு சாதியைச்சொல்லி தள்ளிவைக்கிறார்? காதல் கணவரை கண்டித்து தர்ணா

 
rrr

மூன்று மாதம் குடித்தனம் நடத்திவிட்டு சாதியைச்சொல்லி என்னை தள்ளிவைத்திருக்கிறார்.  என் காதல் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று கரூர் மவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் அந்த இளம்பெண்.

கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியைச் சேர்ந்தவர் ரேவதி.  நர்சிங் படித்து வரும்  இவர் சசிகுமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

 3 மாதத்திற்கு கரூரில் நர்சிங் படித்து வந்தபோது தரகம்பட்டி சசிகுமார் உடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது.  இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவைக்குச் சென்று திருமணம் செய்து கொண்டு அங்கே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.   இதற்கிடையில் தனது மகளை காணவில்லை என்று மாணவியின்  தந்தை  போலீசில் புகார் அளிக்கவும், போலீசார் விசாரணை நடத்தி  அம்மாணவியை மீட்டு வந்து பெற்றோரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

ree

 சசிகுமார் மீண்டும் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு மீண்டும் வெளியேறி இருக்கிறார். மீண்டும் அவர்களை சசிகுமார் அழைத்து வந்திருக்கிறார் .  தற்போது சசிகுமாரின் குடும்பத்தினர் அப்பெண்ணை அடித்து   துன்புறுத்தி வந்திருக்கிறார்கள்.  அதனால்  பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டதாக சொல்கிறார்.  அந்த பெண் இது குறித்து வெள்ளியணை போலீசில் என் புகார் அளித்திருக்கிறார்.

 காதலித்து கல்யாணம் செய்து திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்த பின்னர் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதை காரணம் காட்டி என்னை அவர் கைவிட்டு விட்டார் . இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட டிஎஸ்பி கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார் ரேவதி .  இதை அடுத்து நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கவும் என்றால்.  

 திருமணம் செய்த பின்னர் சாதியை காரணம் காட்டும் சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் ரேவதி.   எஸ் பி அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தை தொடங்கியதால் சசிகுமார் என் கணவர். அவரை  என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ரேவதி கோரிக்கை வைத்திருக்கின்றார்.