ரஞ்சிதாவை அடுத்து நித்தியானந்தா வலையில் சிக்கிய நடிகை கவுசல்யா

 
g

90 களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கவுசல்யா.  விஜய்யுடன் நேருக்கு நேர், பிரியமுடன் , முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க படங்களில் நடித்தார்.   பின்னாளில் அதே விஜய் நடித்த புதுப்பேட்டை படத்தில் குணச்சித்திர நடிகையாக வந்தார்.   தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தவர் கவுசல்யா, 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ன்

இவர் உடல் பருமன்,  முதுகுவலி ஆகியவற்றால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.  கடந்த 2019ம் ஆண்டில்  இதற்காக இவர் நித்தியானந்தா ஆசிரமம் சென்றார்.  அங்கு சென்றதும் கவுசல்யாவின் முதுகுவலி எல்லாம் பறந்துபோய்விட்டது.

நடிகை ரஞ்சிதாவும் இப்படித்தான் நாள்பட்ட நோய் அவதியால் நித்தியானந்தா ஆசிரமம் சென்று அங்கு தனது நோய் தீர்ந்ததால்தான் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.  ரஞ்சிதா - விவகாரம் பெரிதாக வெடித்திருந்த நேரத்தில் நடிகரும், இயக்குநருமான விசு,  தனக்கு ஏற்பட்ட நோய்க்கு நித்தியானந்தா ஆசிரமம்  சென்ற பின்னர்தான் தீர்ந்தது என்று சொல்லி இருந்தார்.

வ்

நித்தியானாந்தாவிடம் இருக்கும் சக்தியால்தான் அவர் மயக்கிவிடுகிறார் என்கிறார்கள்.

ரஞ்சிதா போல் கவுசல்யாவும் நித்தியானந்தா ஆசிரமத்திலேயே இருந்துவிடுவாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தபோது,  எனக்கு உடம்புல நிறைய பிரச்சனைகள் இருந்தது.  அந்த சமயத்தில் தான் நானும் ரொம்ப குண்டாக இருந்தேன்.  அந்த நேரத்தில் மன அமைதியும் தேவைப்பட்டது.  அதனால் ஒரே ஒரு முறை நித்தியானந்தா ஆசிரமம் சென்றேன்.  மற்றபடி நான் அவரோட பக்தை எல்லாம் கிடையாது என்று 2019 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார் .  ஆனால் தற்போதைய நிலைமையே வேறு என்கிறார்கள் .  ரஞ்சிதா போலவே கௌசல்யாவும் நித்தியானந்தா ஆசிரமத்திலேயே இருக்கிறார்.  நித்தியானந்தா ஆசிரமத்தை விட்டு வெளியே வர மறுக்கிறார் என்று தகவல் பரவுகிறது.