கலவரம் நடந்த பள்ளியிலிருந்து எடுத்து சென்ற பொருட்களை திருப்பி கொடுக்க தண்டோரா மூலம் அறிவுரை

 
தண்டோரா

கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதி சந்தேகத்திற்குரிய மரணம், பெரும் கலவரத்தில் போய் முடிந்திருக்கிறது. மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள், தந்த தகவல்கள், மாணவியின் பெற்றோருக்குத் திருப்தி அளிக்காத நிலையில் நான்கு நாட்களாக கனன்று கொண்டிருந்த சூழல், கடந்த ஞாயிறு அன்று கொதிநிலையை அடைந்து மாணவர்களின் சான்றிதழ் எரிப்பு, பள்ளிப் பேருந்துகள், இதர வாகனங்கள் எரிப்பு, பள்ளிச் சொத்துகள் சூறையாடல் என்று பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு, காவல்துறை வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு கலவரம் கட்டுக்குள் வந்திருக்கிறது.

வாட்ஸ் அப் அழைப்பு.. திடீரென திரண்ட மக்கள்.. கள்ளக்குறிச்சி கலவரத்தின் முழு  பின்னணி – News18 Tamil

இதனிடையே கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர்  கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகளான அந்த மாணவி ஸ்ரீமதி, உடல் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீமதியின் மறுபிரேத பரிசோதனை செய்வதற்கு ஸ்ரீமதியின் பெற்றோர் வராத காரணத்தால் அப்போது வேப்பூர் துணை வட்டாட்சியர் மஞ்சுளா ஸ்ரீமதி வீட்டில் இன்று மதியம் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஒரு மணி அளவில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.


இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மாணவி மரணமடைந்த சக்தி பள்ளியில் பொருட்களைத் தூக்கிச் சென்றவர்கள் அவற்றைத் திரும்பத் தரவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோரா போடப்பட்டுள்ளது.