மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக அலுவலக கட்டுமான பணிகள் துவக்கம்

 
aims

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பணிபுரிய பழைய கட்டிடத்தை  பராமரிப்பு செய்யும் பணியில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று பிப்ரவரி 2015 ல் அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட முதற்கட்ட பண்கள் நிறைவடைந்தன. ஆனால் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் இருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஜமைக்கா நிறுவனத்திற்கு ரூபாய் 1800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனை சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பி இருந்த நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தை ரூபாய் 2 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இக்கட்டிடத்தை எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலர்கள் அமர்ந்து அலுவலகமாக செயல்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நடைபெற்று நிறைவுபெற ஆறு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் இதற்கான பராமரிப்பு செலவு ரூபாய் இரண்டு கோடி ரூபாய் எனவும் மத்திய பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.