பிரதமர் படத்தை சேர்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

 
madurai high court

ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் புகைப்படம் வேண்டும் என நீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

chess

சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டிதொடங்க உள்ளது.  பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார்.  ஜூலை 28ஆம் தேதி முதல் ஆக.10ம் தேதி வரை போட்டி விளம்பரத்திற்காக பெருமளவில் பொதுமக்களின் வரி பணம் செலவிடப்பட்டுள்ளது.  சர்வதேச அளவில் முக்கியம் பெற்ற நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது.  தமிழக ஆளும் கட்சி இதனை தங்களுக்கான அரசியல ஆதாயம் தேடும்  நிகழ்வாக பயன்படுத்திக்கொண்டது.  இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற செய்யப்பட்டுள்ளது.  எனவே செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்  பண்டாரி,  நீதிபதி ஆனந்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது

tn

இந்நிலையில் பிரதமர் படத்தை சேர்க்கக் கூடிய வழக்கில்,  சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  போட்டி நமக்கெல்லாம் பெருமை.  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை குறிப்பிட்டுள்ளது.  அதேசமயம் பிரதமர் வருகை 22 ஆம் தேதியை உறுதி செய்யப்பட்டது . இன்றைய நாளிதழ் விளம்பரங்களில் பிரதமர் படம் இடம்பெற்றது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி படத்தை சேர்க்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.