அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

 
ops eps

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

supreme court

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்திருந்தது. அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில்  ஐந்து நாட்களாக விசாரணை நடைபெற்றுவந்தது. ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு, அவைத்தலைவர் மற்றும் நிர்வாகம் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
 
எடப்பாடி பழனிசாமி கட்சி விதிகளுக்கு மாறாக, கட்சியின் அடிப்படை விதிகளுக்கு மாறாக குறுக்கு வழியில் ஒற்றை தலைமையை கைப்பற்ற நினைப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதேபோல் கட்சியின் விதிகளின்படியே பொதுக்குழு கூட்டம் கூட்டபட்டது, பொதுக்குழுவுக்கு உச்சபச்ச அதிகாரம் உள்ளது. இரட்டை தலைமையால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது, அதிமுகவின் பொதுக்குழு ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டது. அப்படிப்பட்ட பொதுக்குழுவின் 94 சதவீத உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தெர்வு செய்தனர். எனவே அவரைத் தேர்வு செய்தது செல்லும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களுடைய வாதங்களை முன்வைத்தது. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர் என செயற்குழு தரப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.