மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூடுதல் அவகாசம்...

 
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூடுதல் அவகாசம்... 

ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் மின்சாரவாரியம் விளக்கமளித்துள்ளது.
 
தமிழகத்தில் மொத்தம்  3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன.  அதன்படி   2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. பயனர்கள்  நேரடியாக மின்வாரிய அலுவலகங்களுக்குச் சென்றோ, அல்லது மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலமாகவோ  மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது.  

மின் இணைப்பு… மின்வாரியம் அதிரடி!

அதாவது, தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம்  தெரிவித்துள்ளது.  இவ்வாறு இணைப்பதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போரின் விவரங்களை அறிந்துகொள்ள முடியும். அத்துடன் வாடகை வீட்டில் குடியிருப்போரும் 100 யூனிட்  இலவச மின்சார சலுகைகளை பெற முடியும்..  ஆகையால்,  மின் இணைப்பு எண்ணுடன்,  ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை காலக்கெடு நிர்ணயிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஜனவரிக்குள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

ஆதார்

இந்நிலையில் மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதலே,   மின் நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாமல்  சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் செலுத்தும் நாளிலிருந்து 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், ஆதார் இணைக்கும் வரை நுகர்வோர் ஆஃப்லைன், ஆன்லைன் முறைகள் மூலம் பணம் செலுத்த முடியாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.