நடிகை பவுலின் ஜெசிக்கா தற்கொலை விவகாரம்- விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்

 
பவுலின் ஜெசிகா

ஆந்திர மாநிலம் சித்தூர் சத்யவேடு பகுதியை சேர்ந்தவர் சினிமா பட நடிகை பவுலின் ஜெசிகா (வயது29) இவர் சென்னை நெற்குன்றம் அன்னம்மாள் நகர் மல்லிகை அவின்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். 

காதல் தோல்வி.. வாய்தா பட நடிகை தீபா என்கிற பவுலின் தற்கொலை.. அதிர்ச்சியில்  குடும்பம்! | Young actress Powlen Jessica commits suicide - Tamil Filmibeat

ஜெசிகா கடந்த 17ந் தேதி (சனிக்கிழமை) மதியம் தனது வீட்டின் படுக்கையறையில்  திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுமுக நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.  தகவல் அறிந்து சென்ற கோயம்பேடு போலீசார் ஜெசிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் ஜெசிகாவின் அறையில் இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். 

அதில் "நான் உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்தேன் ஆனால் அவர் எனது காதலை ஏற்க மறுத்துவிட்டார் இதனால் எனக்கு இந்த உலகத்தில் வாழ விருப்பம் இல்லை எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை" என்று தனது கைப்பட ஜெசிகா எழுதியிருந்தார்.  காதல் விவகாரம் காரணமாக நடிகை ஜெசிகா தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது அவரை வேறு யாராவது தற்கொலைக்கு தூண்டினார்களா என்கிற கோணத்தில் கோயம்பேடு போலீசார் விசாரணையை தொடங்கினர்.அப்போது ஜெசிகா தற்கொலை செய்வதற்கு முன்பு காலை 9மணி அளவில் ஒருவருடன் நீண்ட நேரம்  கடைசியாக பேசியதும் அதன் பிறகே அவரது செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டதும் தெரியவந்தது இதற்கிடையில் ஜெசிகாவின் ஐ-போன் ஒன்று மாயமாகி இருப்பதாக அவரது சகோதரர் ராஜேஷ் பரபரப்பான புகார் ஒன்றை கூறியிருந்தார். இதையடுத்து ராஜேஷ் மற்றும் ஜெசிகாவின்  குடும்பத்தினரிடம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். ஆனால் ஐபோனில் ஜெசிக்கா பயன்படுத்திய சிம் கார்டு என்னை கேட்ட போது அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் ஜெசிகா கடைசியாக செல்போனில் பேசிய நபர் ஒரு  சினிமா பட தயாரிப்பாளர்சிராஜ் என்பது தெரிந்தது தொடர்ந்து செல்போனை ஆய்வு செய்ததில் அந்த சினிமா தயாரிப்பாளரிடம் அடிக்கடி நடிகை ஜெசிகா பேசி வந்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து தயாரிப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர் காரைக்குடியில் படப்பிடிப்பில் இருந்த  தயாரிப்பாளர் சிராஜிடம், ஜெசிகா கடைசியாக பேசும்போது நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு செல்போனை துண்டித்துவிட்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் தனது நண்பர் பிரபாகரனை ஜெசிகா வீட்டிற்கு அனுப்பி பார்த்தபோது தான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜெசிகா தற்கொலை விவகாரம் தொடர்பாக 19ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் என சிராஜ் கோயம்பேடு போலீசாரிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பை காரணம் காட்டி ஐந்து நாட்களாகியும் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருவதால், கோயம்பேடு போலீசார் காரைக்குடிக்கு சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். து தொடர்பாக உயர் அதிகாரிகள் அனுமதியையும் போலீசார் கேட்டுள்ளனர்.