தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா கணவர் பகீர் புகார்!

 
ஹேம்நாத்

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், சொந்த செலவில் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மறைந்த சின்னத்திரை நடிகை VJ சித்ராவின் கணவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஹேம்நாத் உண்மையில் என்னதான் செய்தார்?.. எப்ஐஆர் கூறுவது என்ன?.. முரண்படும்  தகவல்களால் குழப்பம் | FIR varies from Hemnath's police enquiry in Chithra'  death - Tamil Oneindia

சின்னத்திரையில் வெளியான பிரபல நாடகங்களில் நடித்து வந்தவர் சித்ரா காமராஜ் (எ) VJ சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவரான ஹேமந்த் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜாமினில் விடுவிக்கபட்டார். 

இந்நிலையில் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த் கடந்த 25 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “தனது மனைவியான சித்ராவும், தானும் மிகுந்த அந்நியோன்யத்துடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது சின்னத்திரை பிரபலங்கள் அனைவருக்கும் தெரியும். மேலும், தனது மனைவி தற்கொலை செய்துகொண்டபோதே தானும் தனது வாழ்வை முடித்துக்கொள்ள எண்ணினேன். ஆனால் தனது மனைவியை தான் தான் தற்கொலைல்கு தூண்டியதாக தன் மீது சேற்றை வாரி இரைத்தவர்கள் முன் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன், மேலும், தனது மனைவியின் தற்கொலைக்குப் பின்னால் பண பலமும், அரசியல் பலமும் கொண்ட மாஃபியா கும்பல் இருப்பதும் பலருக்கு தெரிந்த உண்மை அவர்களுக்கு பயந்து அதை வெளியில் கூற அனைவரும் தயங்குகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் அவர்களின் பண பலத்துக்கு முன்னால் தன்னைபோன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது. அப்படி செய்தாலும் தனது மனைவி தனக்கு திரும்பக் கிடைக்கப்போவதில்லை. மேலும், தான் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பழியை போக்கவே தற்போது வாழ்ந்த்ய் வரும் நிலையில், சுப்பா ராவ், சரோஜா ராவ், மதுசூதனன், சாய் வெங்கடேஷ், யாமினி, இம்மானுவேல் ராஜா உள்ளிட்ட ஒரு கும்பல் தன் மூலம் தனது மனைவி சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த பணபலம் படைத்த மாஃபியா கும்பலை தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து பணம் பெற முயல்கின்றனர். இச்செயலுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், மற்றொருபுறம் தனது மனைவியின் தற்கொலைக்கு காரணமான கும்பலும் தங்கள் பெயரை வெளியில் கூறினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோம் என மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி தன்னை மிரட்டி வரும் நிலையில் தனது உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.