கணவரை விவாகரத்து செய்யவில்லை - நடிகை சிவரஞ்சனி

 
si

 நடிகை சிவரஞ்சனி தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் பரவி வந்தன.  இதை அவர் மறுத்துள்ளார் . அவரது கணவரும் நடிகருமான ஸ்ரீகாந்தும் இதனை மறுத்துள்ளார் .

என் கணவர் ஸ்ரீகாந்தும் நானும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறோம்.   விவாகரத்து செய்வது  தொடர்பான தகவல் மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  தினமும் எங்களை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.  சமூக வலைத்தளத்தில் பரவி வருவது வதந்தி என்று கூறியிருக்கிறார் சிவரஞ்சனி.

si

 என் மனைவியின் மீதும் குடும்பத்தின் மீது நான் உயிராக இருக்கிறேன்.   தயவு செய்து விவகாரத்து வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

 90களில் பிரபல கதாநாயகியாக இருந்தவர் சிவரஞ்சனி.  தலைவாசல், சின்ன மாப்பிள்ளை, தங்க மனசுக்காரன், பொன்விலங்கு, கலைஞன், ராஜதுரை, தாலாட்டு, செந்தமிழ் செல்வன் என்று தொடர்ந்து பல நடிகர்களுடன் நடித்து வந்தார்.  இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  25 ஆண்டுகளாக இத்தம்பதி சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.   இந்த நிலையில் தான் இவர்கள் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் பரவி இருக்கிறது.  இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.