நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன? உன் பொண்டாட்டி இல்ல நீ கேக்குறதுக்கு? செருப்பு பிஞ்சிடும்.. நடுரோட்டில் நடிகை ஆவேசம்

 
ரெ

நான் நிர்வாணமாக நடிச்சா உனக்கென்ன?  உன் பொண்டாட்டி இல்ல நீ என்னை கண்டிக்கிறதுக்கு?  செருப்பு பிஞ்சிடும் என்று பத்திரிகையாளர் பயில்வான் மீது ஆவேச காய்ச்சல் காட்டி இருக்கிறார் நடிகை ரேகா நாயர். பதிலுக்கு பயில்வான்,  நீ ஆபாசமா நடிச்சா அப்படித்தான் விமர்சனம் பண்ணுவேன் ஆவேசமாகி இருக்கிறார்.  இருவரையும் பொதுமக்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ப்

 பார்த்திபன் நடித்து இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார் ரேகா நாயர்.  இதுகுறித்து பத்திரிக்கையாளர்  பயில்வான் ரங்கநாதன் திரைவிமர்சனத்தில் ரேகா நாயரை கடுமையாக விமர்சித்துள்ளார் .  இந்த ரேகா நாயர்  இறந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தோழி.   சித்ரா இறந்த போது அவருடைய அறையில் என்னென்ன அந்தரங்க விஷயங்கள் இருந்தது என்று நமக்கு தெரியும். அவருடைய தோழி தானே இவர், நிர்வாணமாக மட்டுமில்லை எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்.   அவருக்கு எல்லாமே சகஜம் என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதன் வாக்கிங் சென்று இருக்கிறார்.   அப்போது  ரேகா நாயரும் அங்கே வாக்கிங் சென்றிருக்கிறார்.   பயில்வான் ரங்கநாதனை பார்த்த ரேகா,     என்னை பற்றி எதற்கு இப்படி மோசமாக விமர்சிக்கிறீர்கள்? என்று அவர் கேட்க,  இப்படி மோசமாக நடித்தால் அப்படித்தான் விமர்சனம் செய்வேன் என்று பதில் சொல்ல,  வாக்குவாதம் தடித்திருக்கிறது.

ரெ

 நான் நிர்வாணமாக நடிப்பேன் அதைப்பற்றி கேட்பதற்கு நீ யார்?  நான் உன் பொண்டாட்டியும் இல்ல;மகளும் இல்ல.   நீ எதுக்கு என்னை கண்டிக்கிற?  என்று ஆத்திரப்பட ஒரு கட்டத்தில் பயில்வானை அடிக்க பாய்ந்திருக்கிறார். பின்னர் பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இது குறித்து பயில்வான் ரங்கநாதன்,   ’’கடற்கரையில் என்னை பார்த்த ரேகா,  நான் நிர்வாணமாகத் தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கேயே ஆடையை அவிழ்த்து காட்ட முயன்றார்.   நான்  போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் வா என்று சொன்னேன்.  அதன் பின்னர் தான் அவர் அங்கிருந்து போனார்’’ என்கிறார்.

 ரேகா நாயர்,   ’’நான் அந்த கடற்கரைக்கு அதிகமாக செல்வதில்லை . எதேச்சையாகத்தான் சென்றேன் .  அப்போது அவர் வந்ததால் என்னைப் பற்றி எதற்கு அப்படி கடுமையாக விமர்சித்தீர்கள் என்று கேட்டபோது அது விவாதமாக மாறிவிட்டது .  வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசலாமா என்று கேட்டேன். இனிமே என்னை பற்றி இப்படி பேசினால் செருப்பு பிஞ்சிடும்’’ என்று சொல்லி எச்சரித்து விட்டு வந்திருக்கிறேன் என்கிறார்.