தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகல்

 
gayathri rahuram

தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகுவதாக அறிவித்துள்ளார்.

gayathri-4

நடிகையும்,  நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த எட்டு ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். இவர் தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பரபரப்பு கருத்தை முன்வைத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி உள்ளார்

nullஇந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் ஒரு வெளிநபரை போன்று விமர்சிக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன்.  கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோள். பாஜகவுக்கு எனது நல்வாழ்த்துகள். மோடி ஜி நீங்கள் சிறந்த நபர், நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் குரு, சிறந்த தலைவர். அமித் ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்" என்று பதிவிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்துள்ளார். 


தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த முடிவு எடுக்க காரணம் அண்ணாமலை தான்.  அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.  அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்க தயாராக உள்ளேன். பெண்களுக்கான சமூக உரிமை மற்றும் மரியாதை தராததால் தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.