பிராமணர்கள் பொறுப்புக்கு வரக்கூடாது என அண்ணாமலை நினைக்கிறார் - காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

 
annamalai and gayathri

பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கிய பொறுப்புக்கு வரக்கூடாது என அண்ணாமலை நினைக்கிறார் என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில்,  காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும்,  கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். 

Gayathri

தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிக்கு களங்கம் எனக்கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். தன்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன் என கூறினார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கிய பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்த தவறும் செய்யாத ராகவனைப்போலவே என்னையும் திட்டமிட்டு வெளியேற்றி உள்ளனர். மேலும் தேச பக்தி கொண்ட பிராமணர்களால் மட்டும் தான் பாஜகவிற்கு வாக்களிக்கவும் உழைக்கவும் முடியும் என்றார்.