நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு - சசிகலா இரங்கல்!!

 
sasikala

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு.  இவரது குடும்பத்தினர் மதுரை வீரகனூரில் வசித்து வரும் நிலையில் தாயார் சரோஜினி உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேரில் சென்று வடிவேலுவின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.இந்நிலையில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரபல நகைச்சுவை நடிகர் 'வைகைப்புயல்' திரு.வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பிரபல நகைச்சுவை நடிகர் 'வைகைப்புயல்' திரு.வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.