மறைந்த ஐசரி கணேஷின் தாயார் உருவப்படத்திற்கு கமல்ஹாசன் மரியாதை

 
கமல்

மறைந்த புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு நடிகர் கமலஹாசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஐசரி கணேஷ் வீட்டில் நிகழ்ந்த துயரம்: திரையுலகினர் இரங்கல் - தமிழ் News -  IndiaGlitz.com

தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலனின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் (75) வயது முதிர்வு காரணமாக நேற்று காலை இயற்கை எய்தினார். அவர்களின் இறுதி சடங்கு இன்று காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இவரது மறைவுக்கு 
அரசியல் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், தொழில் அதிபர்கள், திரைத்துறையினர் என பலதரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், உலக நாயகன் கமலஹாசன், இன்று மாலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்து புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஐசரி கணேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.