நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்

 
arjun

நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார். அவருக்கு வயது 85.

arjun

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அம்மாள் (வயது 84). உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் மூத்த கன்னட நடிகர் சக்திபிரசாத்தின் மனைவியாவார். 

லட்சுமி தேவி அம்மாளின் உடல் பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே ஊரில் அவர்களது  தோட்டத்தில் உள்ள அர்ஜுனின் அப்பாவின் சமாதி அருகே  நாளை  நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.