"இனி பாக்கெட்டில் நியாய விலை கடை பொருட்கள்" - அமைச்சர் சக்கரபாணி

 
tn

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் எடுக்கப்படும் என்று   அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

govt

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  நேற்று முன்தினம் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது . நேற்று முதல் உறுப்பினர்களின் கேள்விக்கு துரை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

tn

 இந்நிலையில் சட்டபேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , " ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  கண் கருவிழியை பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் டெண்டர் விடப்பட்டு அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  பரிசோதனை முயற்சியாக நகர்புற, கிராமப்புறங்களில் தலா ஒரு ரேஷன் கடைகளில் புதிய முறை அமல்படுத்தப்படும். நியாய வலைக்கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.