தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது

 
ச்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநின்றவூர் தனியார் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸ் சார் கைது செய்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் என்கிற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட நாலு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.  இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை திருநின்றவூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூரில் இயங்கி வரும் இந்த தனியார் பள்ளியில் தாளாளர் பாலியல் தொழில் கொடுத்த விவகாரத்தில் பெற்றோர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.   இதன் பின்னரே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தாளாளரை கைது செய்துள்ளனர்.

ஓ
 திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் இபி காலணியில் இயங்கி வருகிறது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி.    இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.    பள்ளியின் தாளாளர் மகன் வினோத்.   அவர்தான் பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

 பிளஸ் டூ மாணவிகளிடம் கவுன்சிலிங் இருப்பதாக சொல்லி தனியாக அழைத்து பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு  மாணவிக்கு கடந்த வாரம் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   தனக்கு நேர்ந்ததை சக மாணவிகளிடம் சொல்ல ,  அப்போதுதான் பள்ளியின் நிர்வாகி வினோத் தொடர்ந்து இப்படி செய்து வருவது தெரிய வந்திருக்கிறது.

 பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் சொல்ல,  பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   பள்ளி நிர்வாகி வினோத்தின் செயலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.   இதனால் சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட  மாணவியர்களின் பெற்றோரை தடுத்து நிறுத்தினார்கள் . அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.   வினோத்தை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த அவர் தலைமறைவாகி விட்டார்.   பள்ளி மாணவிகள் பலரும் வினோத் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர் .  இதை அடுத்து பள்ளியின் தாளாளர் வினோத் ஜெயராமன் மீது நாலு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .  

இதனால் பள்ளியில் ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை அடுத்து ஒரு வாரம் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம்.