#Breaking புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 
high court

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

gutka

கடந்த 2006 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா , புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார்.  இதையடுத்து இது தொடர்பான தொடர்ந்து அறிவிப்பாணைகளும் வெளியிடப்பட்டு வந்தன.  இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தது.  அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும் ,  குற்ற நடவடிக்கையை எதிர்த்தும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த வழக்கானது நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது

Madras Court

இந்நிலையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரச்சட்டத்தில் வழிவகை இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.