ஆவின் அட்டை- ரேஷன் அட்டை : இணைக்க உத்தரவு

 
ஆ

 ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது . ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 ஆவின் நிறுவனத்தின் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில்  சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் என்று பிரிக்கப்பட்டு இத்தனை விதமான பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது . 

ஆஅ

ஆவின் ஆரஞ்சு பாலின் பாக்கெட் விலை சில்லறை விலையில் அறுபது ரூபாய்க்கும்,  சிவப்பு பாக்கெட் பால் 76 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.   மாதாந்திர அட்டை தாரர்களுக்கு மட்டும் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 இந்த நிலையில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்திருக்கிறது.  இதனால் ஆவின் மாதாந்திர அட்டை உடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தி இருக்கிறது . 

27 மண்டலங்களில் இணையதளத்தின் மூலமாக இந்த பணி நடந்து வருகிறது.    இதன் மூலமாக முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று கூறுகிறது ஆவின் நிர்வாகம்.