ஆடி அம்மன் ஆன்மீக சுற்றுலா தொகுப்பு - தமிழக அரசு அறிவிப்பு..

 
அம்மன் கோயில் - ஆன்மீக சுற்றுலா


பக்தர்கள் பயன்பெறும் வகையில்  ஆடி அம்மன் ஆன்மீக சுற்றுலா தொகுப்பை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா 17.07.2022 அன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

Spiritual tour - அம்மன் கோயில்

ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-1
சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து புறப்பட்டு அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், பாரிமுனை-அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், இராயபுரம்-அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோவில், திருவொற்றியூர்-அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில்,பெரியபாளையம்-அருள்மிகு அங்காள பரமேஸ்பரி அம்மன் திருக்கோவில், புட்லூர் - அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோவில், திருமுல்லைவாயில்-அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில், திருமுல்லைவாயில்-அருள்மிகு செய்யாத்தம்மன் திருக்கோவில், கொரட்டூர்- அருள்மிகு பாலியம்மன் திருக்கோவில், வில்லிவாக்கம் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.900-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அம்மன் கோயில்கள்

ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-2
சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து புறப்பட்டு அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோவில்,  மைலாப்பூர்-அருள்மிகு முண்டகண்ணி அம்மன் திருக்கோவில், மைலாப்பூர் - அருள்மிகு கோலவிழியம்மன் திருக்கோவில், மைலாப்பூர்-அருள்மிகு ஆலயம்மன் திருக்கோவில், தேனாம்பேட்டை - அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோவில், தி.நகர்- அருள்மிகு பிடாரி இளங்காளி அம்மன் திருக்கோவில், சைதாபேட்டை-அருள்மிகு அஷ்டலெஷ்மி திருக்கோவில், பெசண்ட் நகர்-அருள் மிகுகாமாட்சி அம்மன் திருக்கோவில், மாங்காடு- அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு- அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்பாக்கம் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் கட்டணமாக ரூ.700-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா பயணிகள் ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.