பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் அரசியலை கலக்க வேண்டிய அவசியமில்லை- ஆதினங்கள் கூட்டாக பேட்டி

 
ஆதினம்

சென்னையில் முதல்வர் ஸ்டாலினை முதல்வரை அவர் இல்லத்தில் கோவை பேரூராதீனம் தவத்திரு சந்தாலிங்கம மருதாசல அடிகளார்,சிவகங்கை குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், மயிலாடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சந்தித்தனர்.
 

அப்போது பேசிய அவர்கள், “ஆதினம் நாங்கள் ஒன்றிணைந்து முதல்வரை சந்தித்து ஓராண்டு பணிக்காக வாழ்த்து கூறினோம். வரும் காலங்களில் எப்படி இந்த பிரச்சனையில் சுமூக தீர்வு காண்பது தொடர்பாக முதல்வரிடம் பேசினோம். அவர்  விரைவில் அனைவரும் சேர்ந்து நல்ல முடிவை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

பட்டணப் பிரவேசத்தை சுமுகமாக நடத்த அரசு ஆவன செய்யும் என நம்புகிறோம். அமைச்சர்கள் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் பேசியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் அரசியலை கலக்க வேண்டிய அவசியமில்லை. தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் இந்த ஆண்டு மரபு படி நடைபெறும். இந்த ஆண்டு தருமபுர ஆதினம் பட்டின பிரவேசத்தை மரபுபடி நடத்த அனுமதி அளிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். பட்டினப்பிரவேசம் சமயம் தொடர்பான நிகழ்வு இதில் அரசியல் குறுக்கீடோ, தலையீடோ தேவையில்லை. மேலும் வரும் காலங்களில் மனித நேயத்திற்கு குந்தகம்  ஏற்படாமல் எந்த வித குறுக்கீடுகளும் இல்லாமல் பட்டின பிரவேசம் நடத்த ஆவண செய்யப்படும்  என முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஆதினம் பல்லக்கில் பவனிசெய்வது காலங்காலமாக நடைபெற்று வரும் மரபு, ஆன்மீகத்தின் அடித்தளம் அதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் நடத்தி வருகின்றனர்.  இந்த ஆண்டு தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் புறப்பாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் கலந்தாலோசித்து ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்" எனக் கூறினர்.