தி.மு.க. ஆட்சி கவிழ மின் கட்டண உயர்வு ஒன்று போதும் - டிடிவி தினகரன் பேச்சு

 
ttv

தி.மு.க. ஆட்சி கவிழ மின் கட்டணம் போதும் எனவும், மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா? எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருப்பூர் யூனியன் மில் சாலையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். விழா மேடையில் சிறப்புரையாற்றிய அவர் கூறியதாவது:
தி.மு.க. ஆட்சி கவிழ மின் கட்டணம் போதும். தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்ள்.  மின் கட்டண உயர்வால் சாதாரண மக்களில் இருந்து தொழிலாளர்கள் என அனைவரும் இன்றைக்கு பாதிக்கப்படுகிறார்கள். சொத்துவரி, மின் கட்டணம் உயர்வு இப்படி, மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?. ஹிட்லரை தாண்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.  

ttv dhinakaran

மேடையில் குழந்தை போல் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி. இன்றைக்கு எப்படி இருக்கிறார்? ஆர்.கே நகர் தேர்தலில் எனக்கு வாக்கு சேகரிக்க வந்த பழனிசாமி, அடுத்த 2 மாதத்தில் நீ யாரென்று என்னை கேட்கிறார். எடப்பாடி நகராட்சியில் கூட பழனிசாமியால் ஜெயிக்கமுடியவில்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையாமல் இருக்க காரணமே, 100 சதவீதம் பழனிசாமி தான். கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் அ.தி.மு.க. உள்ளது. இன்றைக்கு அ.தி.மு.க. வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது. ஒரு தாய் மக்களாக இருந்தோம். இன்றைக்கு தனியாக உள்ளோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நமதுகணக்கை தொடங்குவோம். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் அ.ம.மு.க. இருக்கும். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.