சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

 
tn

சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

tn

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என எதிர்கட்சி தலைவர் பத்தாம் பொதுவாக சொல்கிறார்.  பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் இருந்தது என்ற பட்டியல் என்னிடம் உள்ளது. பத்திரிகையில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பேசினால் அதை பேரவையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்த முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

mk stalin

வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவைக்கு வரவேண்டும் . மக்களுக்காக பணியாற்ற அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்குள்  வரவேண்டும் என்று என சபாநாயகர் அழைப்பு விடுத்த நிலையில் அவர்கள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது .தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுகிறது . சட்டப்பேரவையில் எங்களுடைய பேச்சு பதிவு செய்யப்படுவதில்லை என்றார்.