மின்கட்டண உயர்வு - அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்!!

 
eps

மின்கட்டண உயர்வை கண்டித்து  அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

eb

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள  திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

eps

இந்நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி தலைமையில் இன்று  காலை 9.30 மணியளவில், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில், செங்கல்பட்டு நகரில்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற உள்ளது.