ஈபிஎஸ் வசம் செல்லும் அதிமுக அலுவலகம் - மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் திட்டம்!!

 
tn

அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவெடுத்துள்ளது.

admk office

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

tn

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் ஜூலை 14 மற்றும் 15ஆம் தேதிகளில் அணுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது . இந்நிலையில்இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று தெரிவித்துள்ளார் . அதில்,  அதிமுக அலுவலக சீலை அகற்றக் கூறிய வழக்கில் எடப்பாடி பழனிசாமிடம் தலைமை அலுவலக சாவியை வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  அத்துடன் ஒரு மாத காலத்திற்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அலுவலகத்திற்குள் வர அனுமதிக்க கூடாது என்றும் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ops

இந்நிலையில் அதிமுக அலுவலக உரிமை தொடர்பானது பற்றி ஆராயாமல் நீதிமன்ற உத்தரவு உள்ளதுஎன்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.  வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு என்றும் இந்த வழக்கின் உத்தரவு மேல்முறையீடு செய்ய தகுதி என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இவ்வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.