அதிமுக தான் காரணம்.. மாதம் ரூ12,000 கோடி வட்டி கட்டுறோம் - அமைச்சர் செந்தில் பாலாஜி..

 
senthil balaji

கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறைக்கு ரூ. 1.50 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளதாகவும், மின்கட்டண உயர்வுக்கு அதிமுக அரசுதான்  காரணம் என்றும்   அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.  

eb

சென்னை புளியந்தோப்பில் உள்ள  துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுய் செய்தார். அதனைத் தொடர்ந்து  மிழகத்தில் அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து செய்தியாளார்களுக்கு விளக்கம் அளித்தார்.  அவர்  கூறியதாவது, மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசும் , முந்தைய அதிமுக அரசும்தான் காரணம் என்று தெரிவித்தார்.  முன்னாள் அமைச்சர் தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அவர்,   மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது ஏன் என தங்கமணி சொல்ல வேண்டும் என்றார். மேலும் தமிழக பாஜக   பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்குதான் போராட்டம் நடத்த வேண்டும் என்று  கூறினார்.  

EB

 அதிமுக ஆட்சியில்தான் மின்கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர்,   அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 37 சதவீதம் அளவிற்கு மின் கட்டணம்  அதிகரிக்கப்பட்டதாக கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறைக்கு ரூ. 1.50 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர்,   2.37 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகள் உள்ளதாகவும், இது  குடிசை முதல் குடியிருப்புகள் வரை அடங்கும் என்றார்.  2.37 கோடி வீடுகளில், 1 கோடி இணைப்பு பெற்றவர்களுக்கு கட்டண உயர்வால் பாதிப்பில்லை என்று தெரிவித்தார்.  மேலும்  அதிமுக ஆட்சியில் மின்துறைக்கு வாங்கிய கடனால், தற்போது ரூ.12,000 கோடி வட்டி கட்ட வேண்டிய சூழல்  ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.