திமுக அரசிற்கு எதிராக கோவையில் டிச.2ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்

 
admk office

திமுக அரசை கண்டித்து கோவையில் டிசம்பர் 2ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமையில், கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி,ஏ.கே.செல்வராஜ், மாவட்ட அவை  தலைவர் சிங்கை முத்து, பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

edappadi palanisamy sp velumani

இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியதை கண்டித்தும், மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டணம் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் டிசம்பர் 2-ந்தேதி சிவானந்தா காலணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கும் நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கிறார்.