அதிமுக அலுவலகத்திற்கு சீல் - இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 
Madras Court

அதிமுக தலைமைக்கழகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம்  தீர்ப்பளிக்கிறது.

admk

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.  இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்ட நிலையில்,  இரண்டு காவலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் 14 வாகனங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

admk

அத்துடன் இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பினர். 

இந்நிலையில் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்படுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளிக்கிறார்.