காவல்துறை கட்டுப்பாட்டில் அதிமுக அலுவலகம் - போலீசார் குவிப்பு!!

 
rn

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று சீல் வைக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக அங்கு காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.  இதில் கல்வீச்சு, அடிதடி, கத்திக்குத்து உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் வாகனங்களும்  சேதப்படுத்தப்பட்டது.  50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இந்த விவகாரத்தில் தற்போது 14 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

tn

ராயப்பேட்டை தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.  இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வருவாய் துறையினர் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். வேறு எந்தவிதமான அசம்பாவிதங்கள்  நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் இரண்டாவது நாளாக அதிமுக தலைமை அலுவலகம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது  ராயப்பேட்டை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தேவை என்று யாரும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 25ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பினருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.