அதிமுக பொதுக்குழு வழக்கு : விசாரணையை நவ.30ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்..

 
  உச்சநீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வருகிற  30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கோரியிருந்தார்.  இந்த மனு மீதான விசாரணையின்போது,  எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிபதிகள் அமர்வு  உத்தரவிட்டிருந்தது.

அதிமுக எடப்பாடி பழனிசானி ( இபிஎஸ் )

அதன்படி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில்,  ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவை கட்சி முறைப்படி முறையாக நடத்தப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுதில்  உண்மையில்லை என்றும்,  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மட்டுமே அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்,  தீர்மானங்களை குறித்து அவர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியிருந்தார்.  ஆகையால்  ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

செப். 22 இரவு மருத்துவமனை சென்ற ஜெயலலிதா- பிரேக்கிங் செய்திகளை தொடங்கிய அதிமுக

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,  இந்த வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும்,  கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த விவகாரம் என்பதால் 6 மாதங்கள் ஆகிறது; உடனடியாக நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

 ஆனால் ஓபிஎஸ் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு,  எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று வாதிடப்பட்டது.   இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.