மாமூல் தரமறுத்ததால் மருந்து கடைக்காரரை கல்லால் அடித்து கொலை செய்த அதிமுக நிர்வாகி!

 
youth murdered

பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில்  மது அருந்த பணம் கேட்டு பணம் தரமறுத்ததால் தனியார் மருந்தக உரிமையாளர் நாகராஜன்(44) என்பவரை கல்லால் அடித்துக் கொலை செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Murder under Indian Penal Code: All you need to know about it

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழுத்தாணி(எ) பிரபாகரன் (29). பிரபல ரவுடியான இவர், புது ஆத்தூர் கிராமத்தில் 6  வது வார்டு அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். கள்ளச்சாராய விற்பனை ,போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத  வழக்குகள் இவர்மீது நிலுவையிலுள்ளது. 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த பிரபாகரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் லாடபுரம் கிராமத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வரும் நாகராஜன் (44). என்பவரை மிரட்டி மது அருந்த பணம் கேட்டதாக தெரிகிறது.

நாகராஜன் தன்னிடமிருந்த ரூ 5 - ஆயிரத்தை கொடுத்துள்ளார் . இது போதாது என்று தெரிவித்த அவர்கள் திரும்ப வருவோம் பணத்தை எடுத்து வைத்திரு என மிரட்டி விட்டுசென்றுள்ளனர். இதையடுத்து நாகராஜன் பிரபாகரனின் தந்தை பெரியசாமி, மற்றும் அவனது கூட்டாளியான ரகுவின் தந்தை ஆனந்த் ஆகியோரிடம் நடந்ததை கூறி அவர்களை கண்டித்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், ரகு இருவரும் நாகராஜை பலமாக அடித்து தாக்கியுள்ளனர். மேலும் போதையிலிருந்த அவர்கள் நாகராஜின் பின் தலையில் கல்லால் தாக்கியதில் அவர் நிலைகுலைந்துபோகவே அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இதனிடையே காயமடைந்த  நாகராஜை அவரது கிராம மக்கள் நேற்று நள்ளிரவு  பெரம்பலூர் அரசு, மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர். நாகராஜ் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து நாகராஜின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாகராஜை அடித்து கொலை செய்த அதிமுக பிரமுகர் மற்றும் அவனது கூட்டாளிகளான ரவுடிகளால் லாடபுரத்தில்  அச்சமுடன் வாழ்ந்துவருவதாவும், பல முறை அவர்கள் மீது புகார் செய்தும் நடவடிக்கை போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்த கிராம மக்கள் இன்று காலை, பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே துறையூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கிளைல் செயலாளர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் உறுதியளித்ததை அடுத்து துமறியல் கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நாகராஜின் மனைவி மணிமேகலை  கொடுத்த புகாரை பெற்று கொண்ட போலீஸார்  கொலை நடந்தது குறித்து உரிய சாட்சிகள் இருந்தால் மட்டுமே கொலை வழக்குபதிவு செய்ய முடியும் என்று தெரிவித்ததால் பதற்றம் எழுந்தது. இதைதொடர்ந்து நாகாராஜ் தாக்கப்பட்டதை நேரில் பார்த்ததாக லாடபுரம் கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் அளித்ததையடுத்து பிரபாகரன் மீதுகொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.  இதற்கிடையே தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகியான கொலையாளி பிரபாகரன் தனது வழக்கறிஞருடன் பெரம்பலூர் காவல்நிலையத்தில் சரனடைந்துள்ள நிலையில் , அவனிடம் அவனது கூட்டாளிகள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.