அதிமுக ஆட்சி மீண்டும் உருவாகும்; நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- செங்கோட்டையன்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் உருவாகும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும், அதிமுக யாருடன் கூட்டணியில் அமைக்கிறதோ அந்தக் கூட்டணி தான் வெற்றி பெறுமே தவிர, வேறு எவராலும் வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோபி பேருந்து நிலையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே ஏ. செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து முழக்கம் எழுப்பி அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “தமிழகத்தில் அதிமுக அனைத்து வழக்குகளையும் சந்தித்து வெற்றி பெறும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம், தமிழகத்தில் அனைத்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க திமுக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் உருவாகும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுக யாருடன் கூட்டணியில் அமைக்கிறதோ அந்தக் கூட்டணி தான் வெற்றி பெறுவாரே தவிர எவராலும் வெற்றி பெற முடியாது. நாடாளுமன்றத்திற்கு அதிமுக யாரை சொல்கிறார்களோ அவர்கள் தான் செல்ல முடியும் தவிர எவராலும் செல்ல முடியாது என்ற நிலையை மக்கள் உருவாக்கி கொடுக்க தயாராக உள்ளனர்” எனக் கூறினார்.