ஜெயலலிதா இருக்கும்போது ஆளுநர்கள் நடுங்கி இருந்தனர்- புகழேந்தி

 
Pugalendhi

ஓபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு வருவதன் மூலம் ஒற்றுமைக்கே வழி வகுப்போம், பிரிவினையை யாரும் விரும்ப மாட்டார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்..

AMMK functionary Pugazhendhi to join AIADMK - The Hindu


கோவை காந்திபுரம் தனியார் ஹோட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நினைக்கும் போதெல்லாம் இ.பி.எஸ் அணி கறுப்பு சட்டை அணிந்து சட்டப் பேரவை செல்கின்றனர். எஸ்பி வேலுமணி எடப்பாடி பழனிசாமியை விட புத்திசாலி. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேலுமணியை அந்த அணியை வழிநடத்த விட்டால் அவர்கள் பிழைப்பார்கள்.

கர்நாடகாவில் தாய்மொழியை விட இந்தி பேசுகிறார்கள், தமிழ் நாட்டில் தான் குடியேறுபவர்களும் கூட தமிழ் பேசுகின்றனர். பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்யும், ஆளுநரே வெளிநடப்பு செய்தது அதிர்ச்சி அளிக்கிறது ஆளுநர் திராவிட தலைவர்கள் பெயரையே உச்சரிக்க தவிர்த்து அனைவரது எதிப்பையும் சாம்பாதித்து விட்டார், ஆளுநரை எதிர்க்கட்சி போல நடத்துவதை விட்டு பிரச்னையை திமுக முடிக்க வேண்டும். ஆளுநர்கள் கூட அம்மா  இருக்கும் போது நடுங்கி இருந்தார்கள். மோடி 2000 ரூபாய் நோட்டு  செல்லாது என மீண்டும்  அறிவித்தால் இவர்கள் புதைத்து வைத்த பணம் எல்லாம் வெளியே வந்து விடும் என ஜெயலலிதா கூறினார்.

கோடநாடு வழக்கில் அப்போத்திருந்த காவல் துறை  கோட்டை விட்டுவிட்டதால் அது இப்போது CBCID யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, கோடநாடு வழக்கு தொடர்பாக ஸ்டாலின் பேசிய போது ஏன் ஈபிஎஸ் பதுங்கி சென்றார்?  அங்கிருந்தே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா. தமிழக முதல்வர் கோடநாடு வழக்கை விரைந்து முடித்து தீர்வு கொண்டு வர வேண்டும். கோவைக்கு விரைவில் ஓபிஎஸ் வருவார்” எனக் கூறினார்.