"ஓபிஎஸ் ஒரு சுண்டெலி. எடப்பாடி பழனிசாமி யானை" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!!

 
srinivasan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும் என்று திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

eps

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராமராஜ் , கூடலூர் நகர செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்ல திருமண விழாவில் இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.  இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் , கே.சி. கருப்பண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

dindigul srinivasan

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன்,  அதிமுக இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுவது என்பது பொய்.  எங்களோடு ஓபிஎஸ் ஒப்பிடுவதையே நாங்கள் அவமானமாக நினைக்கிறோம்.  ஓபிஎஸ் ஒரு சுண்டெலி.  எடப்பாடி பழனிசாமி ஒரு யானை. யானையுடன் சுண்டெலி ஒப்பிடுவது எப்படி சரியாகும் ? ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.