அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா? இன்று காலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

 
high court

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூட உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி அக்கட்சி உறுப்பினர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஜூன் 22 ஆம் தேதி தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. 
இந்த வழக்கின் தீர்ப்பில் , பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை கட்சி முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதி பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி வழங்கினார்.

tn

இதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் மேல்முறையீடு செய்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஓபிஎஸ் தரப்பில் நிறைவேற்ற அனுமதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தனி தீர்மானமும்  நிறைவேற்ற கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.  இதன் அடிப்படையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு,  மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது.

Madras Court

இதைத் தொடர்ந்து தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது , அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா ?பொதுக்குழுவை கூட்ட தலைமை நிர்வாக தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா ?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

tn

அதேசமயம் ஓபிஎஸ் தரப்பிலோ பொதுக்குழுவுக்கு  ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக முன்வைத்த வாதம் தவறு என்றும்,  ஒட்டுமொத்தமாக உள்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை  ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.  இந்த சூழலில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று காலை 9 மணிக்கு தள்ளி வைத்துள்ளார் . இன்று காலை 9:15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கூடும் நிலையில் இதற்கு முன்பாகவே தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.