அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இல்லத்தில் சோதனை

 
tn

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

RAID TTN

நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி  உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது 11.08.2022ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்சஒழிப்புத்துறை அறிவித்திருந்தது. 

surana raid

இந்நிலையில் நாமக்கல்லில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறை  போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் கே.பி.பி.பாஸ்கரன் சொத்துக்களை மதிப்பிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.