பன்னீர்செல்வத்தை இயக்குவது திமுக: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 
vijayabaskar

ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலில் அதிமுக எப்பேர்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

karur

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. கரூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். தேமுதிக கட்சியில் இருந்து விலகி பத்துக்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், “நம்மிடம் இருந்து போன துரோகிகள் போகாமல் இருந்தால் மூன்றாவது முறையாக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும். மன்னார்குடி குரூப், கொள்ளைக்கார குரூப் ஜெயலலிதா மறைவிற்கு காரணமானவர்கள் கட்சியை பிரித்தனர். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி அடைந்தோம். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலில் அதிமுக எப்பேர்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு. 

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டமன்றத்தில் பேசும் போது கருணாநிதி பக்தன் என்று சொல்கிறார். இப்போது அவரை இயக்குவதை திமுக தான், ஓபிஎஸ் மகன் எம்பி ஆகின்றார். அவர் நல்லாட்சி நடத்துகின்றார்கள் என ஸ்டாலினை பார்த்து சொல்கிறார்” என பேசினார்.