ஓபிஎஸ் ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை; சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை

 
opanneerselvam

முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் பொதுக்கூட்டம் முன்னாள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தலைமையில் நடைபெற்றது.

நான் அப்படி பேசுவேனா? அதற்கான தகுதி எனக்கு இல்லை..? அதிமுக எம்எல்ஏ பேச்சால்  பரபரப்பு!!! | nakkheeran

இந்த பொதுக்கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் பா. மோகன் கலந்து கொண்டார், அப்போது பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, “ஓபிஎஸ் அம்மா இருக்கிற போது உண்மையாக இருக்கவில்லை. சசிகலா குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தார். ஆனால் இப்போது சசிகலா, தினகரனுடன் கள்ள தொடர்பு வைத்துக்கொண்டு சசிகலா நல்லவர் சொல்வது நியாயமா? அம்மா மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பம் தான் என்று அப்போது ஆர் கே நகரில் தேர்தலில் ஓபிஎஸ் சொன்னது, ஆனால் இப்போது சசிகலாவுக்கு அம்மா மரணத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என சொல்கிறார். இது நாடகமா?” என பேசினார். 

அப்போது மது போதையில்  ஒருவர், ஓபிஎஸ் பத்தி நீ எதற்கு பேசுகிறாய் என்று கையை நீட்டி உட்காருயா என சொன்னதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது குடிபோதையில் இருந்த நபரை அதிமுக நிர்வாகிகள்  மடக்கி இழுத்து சென்றார், இந்த பொதுக்கூட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.