அதிமுக முழுமையாக எடப்பாடியாரிடம் உள்ளது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!

 
eps

எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு வழக்கறிஞர் இன்பதுரை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த 11ஆம் தேதி அதிமுக  தலைமை அலுவலகம் அருகே விரும்பத்தகாத வன்முறை செயலில் ஈடுபட்டனர்.அதிமுக தலைமை அலுவலகத்திற்கு திமுக அரசு சீல் வைத்தது. திமுக அரசு சீல் வைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திமுக அரசு, அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்றி உடனடியாக இன்றே திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது

எடப்பாடியாரிடமே சாவியை ஒப்படைக்க வேண்டும் எனவும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு முன்பே ஜெயக்குமார் ஆதிராஜாராம் ஆகியோர் சார்பில் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருந்தோம் ஆனால் பாதுகாப்பு வழங்கவில்லை. அதிமுக தலைமை அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம், அலுவலகம் திறப்பது பற்றி நீதிமன்ற உத்தரவு முழுமையாக கிடைக்கப்பெற்ற பின் விவரமாக தெரிவிக்கின்றோம். ஓபிஎஸ் தரப்பில் மேல்மறையீடு செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் அதிமுக முழுமையாக எடப்பாடியாரிடம் உள்ளது என்பதற்கு தற்போதைய தீர்ப்பு ஒரு உதாரணம்” என தெரிவித்தார்.