ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை அறிவிப்பார்- ஜெயக்குமார்

 
jayakumar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

jayakumar

இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்கக் கோரி அண்ணாமலையை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இடைத்தேர்தலில் ஆதரவளிக்கக் கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை அறிவிப்பார், வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டணி கட்சிகளோடு ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்.” எனக் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்  அதிமுகவை பொறுத்தவரையில்  பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 2  அணிகளும் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளும்  தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளை தனித்தனியே சந்தித்து ஆதரவு கோரி வருவது குறிப்பிடதக்கது.  முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஜிகே வாசன் மற்றும் ஜான் பாண்டியனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடதக்கது.