தமிழ்நாடு என்பதே பொருத்தமான பெயராகும் - ஜெயக்குமார்

 
jayakumar

அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் வழி வந்தவர்கள் , தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் தமிழ்நாடு என்ற பெயரே அதிமுக ஆதரிக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது.

Cannot join PM Modi Cabinet as 'uninvited guest': AIADMK minister D  Jayakumar | India News,The Indian Express


அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் விஜயகுமார் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து இருக்க கூடிய கருத்து பண்பாடு இல்லாத மிருகத்தனமான செயல். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அடையாளம் காட்டியது அதிமுக தான். அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் வழி வந்தவர்கள் , தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் தமிழ்நாடு என்ற பெயரே அதிமுக ஆதரிக்கிறோம்*

தற்காலிக செவிலியர்கள் மீதான பணிவாய்ப்பு மறுப்பு என்பது திமுக அரசின் தவறான செயல். திமுக அரசு விழா அரசாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. விவசாயிகளை வற்புறுத்தி 33 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் குறைவான விலையில் பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. எட்டு வழி சாலை திட்டம் குறித்து ஆட்சிக்கு முன் மற்றும் ஆட்சி அமைத்த பின் வேறுபட்ட பச்சோந்தித்தனமான கருத்துக்களை திமுக தெரிவித்து வருகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.