மின் கட்டண உயர்வு- செந்தில் பாலாஜி வீண் பழி சுமத்துகிறார்: தங்கமணி

 
thangamani

அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும் குமாரபாளையம் சட்ட மன்ற உறுப்பினருமான பி.தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு... சிக்கலில் அதிமுகவினர்..!

அப்போது பேசிய தங்கமணி, “ஒழுங்கு முறை ஆணையத்தில் அறிவிக்காமல் மின்சார கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது மக்கள் நலன் கருதி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்கள் சிரமப்படக்கூடாது என அவருடைய ஆட்சி காலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட வில்லை.

மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசு மீது அமைச்சர் திரு செந்தில் பாலாஜி வீண் பழி சுமத்துகிறார். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டால் தான்  மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது. நிர்வாக திறமை இருந்ததால்தான் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தடையில்லாத மின்சாரம் அதிமுக ஆட்சியில் வழங்கி வந்தோம். மின்சார கட்டண உயர்வால் மேற்கு மண்டலத்தில் உள்ள விசைத்தறி தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். முதல்வரிடம் நற்பெயர் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு அவசரக் கதியில் 1 லட்சம்  மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.இதனால் பல்வேறு இடங்களில் மின் மாற்றிகள் பழுதடைந்துள்ளன. விவசாயத்திற்கு வழங்கக்கூடிய மும்முனை மின்சாரம் முழுமையாக வழங்கவில்லை. தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என திமுக கூறியது. தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்து தான் வருகிறது” என தெரிவித்தார்.