மக்கள் மனம் மாறி இருக்கிறார்கள்; அதனால் அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம்- செங்கோட்டையன்

 
Sengottaiyan

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சி போட்டியிடுமா என்பதை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஓரிரு நாளில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி அறிவிப்பார் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

sengottaiyan

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு கோ அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை பொருத்தவரையிலும் அதிமுக களம் காணுகிற தேர்தலாக அமைகிறது. கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணியை பற்றி விரைவில் முடிவு செய்வார். நாளை மாலை அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பூத் கமிட்டி மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் தனியார் மன்றத்தில் நடைபெறுகிறது.

மக்கள் மனம் மாறி இருக்கிறார்கள். மக்களின் மனமாற்றத்தின் காரணமாக அதிமுக கூட்டணி ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெறும். கடந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தாலும், இந்த முறை யார் போட்டியிடுவது என்பதை கழகத்தின் பொதுச் செயலாளரும், கூட்டணி கட்சி தலைவர்களும் தான் முடிவு செய்வார்கள், அதில்  என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது. எங்களை பொறுத்தவரை கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் தான்  முடிவு செய்வார். அந்த கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றே தீரும். 

ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, அதிமுக ஒன்றுபடாமல் டெபாசிட் வாங்க முடியாது என்று கூறியதற்கு காரணம், கடந்த 1993 இல் பெங்களூரில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட புகழேந்தி டெபாசிட் வாங்கவில்லை. அதைத்தான் சொல்லி இருக்கிறார்” என்றார்.