அதிமுகவில் விரைவில் தேர்தல்- ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்: காமராஜ்

 
kamaraj

100 சதவிகித அ.தி.மு.க தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் இருப்பதால் விரைவில் தொண்டர்களுக்கான தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார்  என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்குவதை நிறுத்த வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்! |  nakkheeran

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வையும் திரும்பப் பெற வலியுறுத்தி  முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் அ.தி.மு.க சார்பில் தஞ்சை ரயில் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க வினர் பங்கேற்றனர். அப்போது பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “ஒரு பெருந்திரளான கூட்டத்தை, தெற்கு மாவட்டத்தில் கூடுமா, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா  என்று கேட்டவர்கள் எல்லாம் மூக்கிலே கை வைத்து கொண்டு உள்ளார்கள். தஞ்சை மாவட்டம் யாருக்கும் தனிப்பட்ட ஒருவருக்காக அல்ல. அ.தி.மு.க என்பது தொண்டர்களுக்கான இயக்கம். இதில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம், ஒரு நாள் காமராஜ் கூட தலைமை ஏற்கலாம். இது தொண்டர்கள் வளர்த்த இயக்கம். 

தற்போது தற்கால பொதுச் செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி  தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் தொண்டர்களுக்கான  தேர்தல்   அறிவிக்கப்பட்டு, தேர்தல் மூலம் தொண்டர்கள் தேர்வு செய்கிற பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார். அதிமுகவை பொறுத்தவரை யாரை நம்பியும்  இந்த இயக்கம் இல்லை, தொண்டர்களை நம்பி  உள்ளது. தொண்டர்கள் பெரும் பகுதி, அதாவது 100% தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கிறார்கள். எடப்பாடி பின்னால் எப்போதும் அதிமுக இருக்கும். மேலும் பயிர் காப்பீடு செய்வதற்கு எந்த  இன்சூரன்ஸ் கம்பெனி என்று தெரியவில்லை, அதனால் உடனடியாக எந்த இன்சூரன்ஸ் கம்பெனி என்பதை அறிவித்து, ப்ரீயம் செலுத்துவதற்கான  தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலக்கெடு முடிய உள்ளதால், இன்னும் ஒரு காலம் நீடிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.