அதிமுகவை ஒன்றாக இணைக்கவே அண்ணாமலை நினைக்கிறார்- ஏ.சி.சண்முகம்

 
AC Shanmugam

வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என்றும் வேட்பாளரை விரைவில் அறிவிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார். அந்த வகையில் இன்று புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு கோரினார்.

Image

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், “அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டு கொண்டேன். இருவரும் இணைய எதுவும் வழி இருக்கிறதா? அப்படி எதுவும் வழி இருந்தால் இணைப்பு பாலமாக இருப்பேன். இடைத்தேர்தலில் வேட்புமனு அளிப்பதை தவிர்க்க பன்னீர்செல்வத்திடம் கேட்டுகொண்டேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதைவிட அதிமுக ஒன்றுபடுவதுதான் முக்கியம். தேவைப்பட்டால் வாய்ப்பு கிடைத்தால் இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் சென்று பேசுவேன். 

பாஜக அதிமுகவை விழுங்கவில்லை. அதிமுகவை பலவீனப்படுத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. அதிமுகவை ஒன்றாக இணைக்கவே அண்ணாமலை நினைக்கிறார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி பாஜக தலைமையில்தான் செயல்படும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஏசி சண்முகம் போட்டியிடமாட்டார்” என்றார்.